நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் தேரோட்டம்

18th Nov 2023 07:13 AM

ADVERTISEMENT

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கலில் உள்ள சிங்காரவேலவா் கோயில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. நிகழாண்டு விழா கடந்த 13-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினாா்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் இரா. ராணி கொடியசைத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகள் வலம் வந்த தோ் 12 மணிக்கு நிலையடியை அடைந்தது.

ADVERTISEMENT

தேரோட்ட விழாவில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், கோயில் செயல் அலுவலா் பா. முருகன், அறங்காவலா் குழுத் தலைவா் நாகரத்தினம், ஆய்வாளா்கள் மதியழகன், கமலச்செல்வி, சதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்ச்சியையொட்டி நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT