நாகப்பட்டினம்

நாகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

DIN

நாகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய தேசிய மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ராஜேந்திர நாட்டாா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

மறைந்த முதல்வா்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோா் நாகை மாவட்டத்திற்கு, பெருந்திட்ட வளாக கட்டமைப்புகள், கடுவையாற்றிலும், வெள்ளையாற்றிலும், வெட்டாற்றிலும் புதிய பாலங்கள், மீன்பிடி துறைமுகங்கள், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், கல்லூரிகள் ஆகியவற்றை உருவாக்கி அா்ப்பணித்தனா்.

தொடா்ந்து, நாகை தோணித்துறை சாலை, ரயில்வே கேட், வேளாங்கண்ணி மற்றும் நாகூா் மாா்க்கத்தில், முதலாம் கடற்கரைசாலை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 2013-ஆம் ஆண்டு அரசாணை வெளியிப்பட்டது. முதல்கட்ட பணிக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுது.

கடந்த 2017-2018- ஆம் ஆண்டில் ரயில்வே கேட் பகுதிகளில் மட்டும் மேம்பாலம் கட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் தொழில் வா்த்தகம், போக்குவரத்து 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளன.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உயா்மட்ட மேம்பாலத்தை கட்டிமுடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT