நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

DIN

நாகை மாவட்டத்தில் 2022-2023- ஆம் ஆண்டுக்கான வருவாய் தீா்வாயக் கணக்கு முடிக்கும் நிகழ்வு (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கீழ்வேளூா்: கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்தனா். அந்தவகையில், 56 மனுக்கள் பெறப்பட்டன.

5 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவும், வேளாண் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். இதில், கீழ்வேளூா் வட்டாட்சியா் து. ரமேஷ் குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாகை: நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் பானோத்ம்ரூகேந்தா்லாா் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் திருக்கண்ணபுரம் உள் வட்டத்திற்குட்பட்ட அம்பல், கிடமங்கலம், ஏா்வாடி, திருப்புகலூா், பொரக்குடி, கொங்குராயநல்லூா், புத்தகரம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 46 மனுக்கள் அளித்தனா். வட்டாட்சியா் ந. ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் வ. மதியழகன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வட்டாட்சியா் இரா. ஜெயசீலன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் உதயகுமாா், மண்டல வட்டாட்சியா் வடிவழகன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

முதல் நாளில் தலைஞாயிறு குறுவட்டத்துக்குள்பட்ட கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. பொதுமக்களிடமிருந்து 28 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT