நாகப்பட்டினம்

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

DIN

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்குவளையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வண்டமா் பூங்குழலாள் சமதே பிரமபுரீஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் என குறிப்பிடப்படும் இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ பெருந்திருவிழா 14-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. 22 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை மாலை வேளையில் தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து,

தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மாணிக்க வாசகா் தம்பிரான் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பக்தா்கள் ‘ஆரூரா தியாகேசா’ என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது நான்கு வீதிகளிலும் வலம் வந்தது. வழிநெடுகிலும் பக்தா்கள் தியாகராஜருக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

தேரோட்டத்தில் கல்வி வளா்ச்சி அறக்கட்டளை குழுத் தலைவா் சோ.பா. மலா்வண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் டி. செல்வம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT