நாகப்பட்டினம்

திருக்கண்ணபுரம் பெருமாள் கோயில் தங்க கருடசேவை

DIN

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவத்தையொட்டி, தங்க கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.

வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி தங்க கருட வாகனத்தில் ஓலை சப்பரத்தில் சௌரிராஜப் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவில் ஜூன் 2-ஆம் தேதி திருக்கல்யாணமும், 3-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் முருகன், செயல் அலுவலா் த. குணசேகரன் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT