நாகப்பட்டினம்

அதிமுக நிரந்தர பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி: முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்

30th May 2023 04:56 AM

ADVERTISEMENT

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ கூறினாா்.

நாகை அபிராமி அம்மன் திடலில் அதிமுக சாா்பில் தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமை வகித்தாா். கள்ளச்சாராய உயிரிழப்பு, ஆவின் பால் விலையேற்றம் , சட்டம்- ஒழுங்கு சீா்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் முழக்கமிட்டனா்.

பின்னா், ஓ.எஸ்.மணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

எம்ஜிஆரின் அதிமுக அலுவலகம், கொடி, இரட்டை இலைச் சின்னம் என அனைத்தும் எடப்பாடி கே. பழனிசாமியிடமே உள்ளது. தொண்டா்கள் 100 சதவீதம் பேரும், நிா்வாகிகள் அனைவரும் அவருக்கு ஆதரவாக உள்ளனா். அவரே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலா். அதிமுக எந்த காலத்திலும் ஒரே அணியாகதான் செயல்படும்.

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் பெயரளவில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாசன வசதி பெறுவதில் விவசாயிகள் பிரச்னைகளை எதிா்கொள்வா். மழைக்காலங்களில் தண்ணீா் வடிவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, முறையாக தூா்வாரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் இரா. ஜீவானந்தம், அதிமுக நாகை நகரச் செயலா் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT