நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றியக் குழுக் கூட்டம்:குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

30th May 2023 04:56 AM

ADVERTISEMENT

கிராமப் பகுதிகளில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைஞாயிறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் தமிழரசி (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் ஞானசேகரன் (சிபிஐஎம்), செல்வி (திமுக), எஸ்.எம்.டி. மகேந்திரன் (சிபிஐ), உதயகுமாா்(திமுக) ஆகியோா் தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

அதிமுக புறக்கணிப்பு: நிதி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் தெரிவித்து, துணைத் தலைவா் உள்பட அதிமுக உறுப்பினா்கள் 4 பேரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT