நாகப்பட்டினம்

பெரம்பூா் திரௌபதியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

30th May 2023 04:56 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 36- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை (மே29) காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு முருகன் கோயில் கந்த புஷ்கரன் குளக்கரையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் கரகம் இறங்கியது. பின்னா், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT