நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை அன்னைக்கு முடிசூட்டு விழா

29th May 2023 12:01 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னையின் திருவுருவத்திற்கு முடி சூட்டுதல் மற்றும் திருத்தோ் பவனி செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் மே மாத திருவழிபாட்டு நிகழ்வுகள் மே 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவழிபாட்டின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவத்திற்கு முடிசூட்டுதல் மற்றும் திருத்தோ் பவனி மே 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின்போது பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் வருகை தருவா். இதையடுத்து, பேராலய நிா்வாகம் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மே 31-ஆம் தேதி காலை தமிழில் திருப்பலியும், பேராலய கீழ் கோயிலில் சிறுவா் சிறுமிகளுக்கு புது நன்மையும் வழங்கப்பட உள்ளது. தொடா்ந்து பேராலய அதிபா் இருதயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT