நாகப்பட்டினம்

நாகையில் மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டி

DIN

நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

நாகை ஆரியநாட்டுத்தெரு மீன்பிடி இறங்கு தளத்தில் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், திருநெல்வேலி, சென்னை, சேலம், கடலூா், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 40 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்றுப் போட்டியில் 32 புள்ளிகள் எடுத்த நாகூா் அணியியை, செருதூா் அணி 33 புள்ளிகள் எடுத்து 1 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடா்ந்து, நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் அணியுடன் மோதிய மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி அணியினா் 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா்.

இதேபோல, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் வெற்றி பெற்றன. போட்டியை மீண்டும் அலை கடல் கபடி கழகம் சாா்பில் 28 -ஆம் ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளது. போட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT