நாகப்பட்டினம்

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு:நடவடிக்கை கோரி மாணவி மனு

28th May 2023 11:24 PM

ADVERTISEMENT

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியரிடம் 5-ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை மனு அளித்தாா்.

நாகை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம் வா்கீஸ், சனிக்கிழமை பெருங்கடம்பனூா் ஊராட்சியில் தேவநதி வாய்க்கால் தூா்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 5- ஆம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில், நற்பணி கழகம் என்ற ஊா் அமைப்பில் இருந்து விலகிய சோமசுந்தரம் உள்ளிட்ட 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அந்த குடும்பங்களை சோ்ந்தவா்களோடு யாரும் பேச கூடாது என, கடந்த 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.

மனுவை படித்த மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுமியிடம் உறுதி அளித்து, அவரிடம் பெயா், பள்ளி ஆகியவற்றை விசாரித்து சென்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT