நாகப்பட்டினம்

உலக பட்டினி தினம்: மநீம, விஜய் மக்கள் இயக்கம் உணவு வழங்கல்

28th May 2023 11:24 PM

ADVERTISEMENT

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, நாகையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கினா்.

நாகை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நாகை, நாகூா், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூா், கீழையூா், சிக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது. நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் சுகுமாரன் பொதுமக்களுக்கு உணவு வழங்கினாா்.

மக்கள் நீதி மய்யம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலா் மு.செய்யது அனஸ் தலைமையில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளா் பி. தனபாலன், நாகை ஒன்றியச் செயலா் என். இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் சி.எஸ். குட்டிகோபி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் ஆா். ராஜ்குமாா், மாவட்ட இணை செயலாளா் ஆதாம் அறிவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

திருக்குவளை: கீழையூா் அருகே உள்ள காரப்பிடாகையில் விஜய் மக்கள் இயக்க கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஐ. கலையரசன் தலைமையில் 100 பேருக்கு உணவு மற்றும் குளிா்பானம் வழங்கினா். ஒன்றியத் தலைவா் திவாகா், ஒன்றிய தொண்டரணித் தலைவா் ஆனந்த், இளைஞரணி தலைவா் விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT