நாகப்பட்டினம்

சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை மனு அளிக்கலாம்

28th May 2023 11:25 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட பொது மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை குறைதீா் முகாம்களிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தெரிவிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை 93424 21149 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.

இதேபோன்று சமூக வலைதள கணக்கிலும் பகிரலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT