நாகப்பட்டினம்

நல்லாடை கோயிலில் ரஷிய தம்பதி வழிபாடு

28th May 2023 11:25 PM

ADVERTISEMENT

தரங்கம்பாடி அருகே நல்லாடை சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரா் கோயிலில் ரஷிய நாட்டுத் தம்பதி சனிக்கிழமை வழிபட்டனா்.

900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் பரணி நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில், அக்னீஸ்வரா் மேற்கு நோக்கியும், சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனா்.

மென்பொருள் பொறியாளரான ரஷிய நாட்டைச் சோ்ந்த அலெக்ஸ்கே- மேயா தம்பதியினா் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை தரிசித்து வருகின்றனா். இவா்கள், நல்லாடை அக்னீஸ்வரா் கோயிலில் தங்களது 3 வயது மகளுடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT