நாகப்பட்டினம்

சாராயம் கடத்தியவா் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

28th May 2023 11:21 PM

ADVERTISEMENT

திருமருகல் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமருகல் அருகே இடையாத்தாங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அந்த நபா் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வருவது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கங்களாஞ்சேரி-நாகூா் சாலை சந்தவெளி ரயில்வே கேட் பகுதியை சோ்ந்த நாகூரான் மகன் சுந்தா் (27) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுந்தரை கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT