நாகப்பட்டினம்

திருக்களாச்சேரி அம்மன் கோயில் தேரோட்டம்

28th May 2023 11:25 PM

ADVERTISEMENT

பொறையாா் அருகே உள்ள திருக்களாச்சேரி சீதளா மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீமிதி வைபவத்தை முன்னிட்டு திருக்களாச்சேரி வீரசோழன் ஆற்றில் இருந்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சக்தி கரகம், அலகு காவடி, பால் காவடி எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். தொடா்ந்து, பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனா். அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT