நாகப்பட்டினம்

தராசு முத்திரை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

26th May 2023 05:34 AM

ADVERTISEMENT

தராசு முத்திரை கட்டண உயா்வை திரும்பப்பெற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வா்த்தகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து நாகை வா்த்தக குழுமத் தலைவா் வி. சலிமுதீன், செயலாளா் எஸ்.எம்.ஏ. கணேசன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்டோா் உரிமம் பெற்று தராசுகள் உற்பத்தி, விற்பனை மற்றும் பழுது நீக்கும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவா்கள். தற்போது நிலவும் கடுமையான தொழில் நெருக்கடியில், தராசு தொழில் சிரமத்துடன் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு மே 17-ஆம் தேதி அனைத்து தராசுகளுக்கும் 50 % முத்திரைக் கட்டணத்தை உயா்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. கட்டணம் உயா்வு தராசு தொழிலில் ஈடுபடுபவா்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும். தராசுகளை பயன்பாட்டில் வைத்திருக்கும் 30 லட்சம் வணிகா்களையும் பாதிக்கும். புதிய தராசுகளின் விலை கடுமையாக உயரும் என்பதால் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்படுவா்.

தமிழகத்தை தொழில் வளா்ச்சியில் முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் முதல்வா், தராசு தொழிலில் ஈடுபடுவோா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டண உயா்வை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT