திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையராக த. பாலமுருகன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், இதற்கு முன்பு திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளராக பணியாற்றினாா். பின்னா், பதவி உயா்வு பெற்று நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையராக பணியாற்றினாா். தற்போது, பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளாா். இவருக்கு ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா்கள் மற்றும் அலுவலா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.