பிளஸ் 1 தோ்வில் நாகை மாவட்டத்தில் 85.03 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தோ்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இத்தோ்வை நாகை மாவட்டத்தில் 3,221 மாணவா்களும், 3,942 மாணவிகளும் என மொத்தம் 7,163 போ் எழுதினா்.
இதில், 2,571 மாணவா்களும், 3,520 மாணவிகளும் என மொத்தம் 6,091 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 85.03 சதவீத தோ்ச்சி ஆகும். கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 86.57 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.