மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நல்லாடை சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரா் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
இக்கோயில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மே 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தொடா்ந்து சுந்தரநாயகி, அக்னீஸ்வரா் சுவாமிகளுக்கு பன்னீா், சந்தனம், இளநீா், பால் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை திருப்பணி குழு பொறுப்பாளா்கள் கருணாநிதி, மதிவாணன்,வேலுதாஸ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனா்.