வேதாரண்யத்தில் புதிதாக நிறுவப்பட்ட கலைஞா் நூற்றாண்டு விழா பூங்கா வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ராஜாளிக்காடு ஸ்வஸ்திக் நகரில் ரூ.27 லட்சத்தில் நிறுவப்பட்ட சிறுவா் விளையாட்டு கட்டமைப்புடன் கூடிய பூங்காவை மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் திறந்து வைத்தாா். நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஹேமலதா, ஆத்மா திட்டக் குழு உறுப்பினா் என். சதாசிவம், கூட்டுறவு சங்க இயக்குநா் முருகையன், வழக்குரைஞா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.