மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் சீரடி சாய்பாபா கோயிலில் வைகாசி மாத வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சீரடி சாய்பாபா சிலைக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பழ வகைகள் இனிப்பு மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான கலந்து கொண்டனா்.
தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அமிா்த சாய் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.