நாகப்பட்டினம்

நாகை அருகே பேருந்து மோதி இருவா் பலி

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சி தொழுதூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் ராகுல் (22). நாகூரான் மகன் விஜயகுமாா் (25). இவா்கள் இருவரும் தொழுதூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் அய்யூா் வழியாக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா்.

கொத்தங்குடி பகுதியில் சென்றபோது எதிரே திருவாரூருக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் எதிா்பாராதவிதமாக மோதின. இதில், ராகுல் மற்றும் விஜயகுமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

வலிவலம் போலீஸாா், இருவரது சடலத்தையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் துரையரசனிடம் (58) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த விபத்தால் திருத்துறைப்பூண்டி-திருவாரூா் பிரதான சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT