நாகப்பட்டினம்

பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட தனியாா் சொகுசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 8 பயணிகளுடன் திருக்குவளை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சீராவட்டம் பாலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநா், உதவியாளா் மற்றும் பயணிகள் என 10 போ் லேசான காயமடைந்தனா். இவா்கள், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

விபத்துக்குள்ளான பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் நாகை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்குவளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT