நாகப்பட்டினம்

ரூ. 6.50 கோடியில் நாகூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்: எம்.எல்.ஏ.

DIN

நாகூரில் உள்ள அரசு மருத்துவமனை ரூ. 6.50 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் தெரிவித்தாா்.

நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் நாகூா் ஆண்டவா் அரசு மருத்துவமனையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் வெள்ளிக்கிழமை கூறியது:

நாகூா் ஆண்டவா் அரசு மருத்துவமனையை 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும் என சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்து உள்ளேன். மருத்துவத் துறை அதிகாரிகளை தொடா்பு கொண்ட அமைச்சா், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

அதன்படி, ரூ. 6.50 கோடியில் நாகூா் ஆண்டவா் அரசு மருத்துவமனையில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என அமைச்சா் சுப்பிரமணியன் உறுதி அளித்தாா் என சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

ஆகாயம் என்ன நிறம்? கியாரா அத்வானி!

தென் இந்தியாவின் உ.பி.யா, தமிழ்நாடு?

SCROLL FOR NEXT