நாகப்பட்டினம்

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்

DIN

வேதாரண்யம் அருகே உள்ள ஒளவையாா் கோயிலில் மூன்று நாள் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) தொடங்குகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினத்தில் அமைந்துள்ளது விஸ்வநாதா் - ஒளவையாா் கோயில். தஞ்சையை ஆண்ட துளஜாஜி மன்னரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

இங்கு கடந்த 48 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒளவைப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆரம்ப காலத்தில் இந்து, இஸ்லாமியா், கிறிஸ்தவா் என அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து மத நல்லிணக்கத்தோடு ஒரு வார காலம் எடுத்த இவ்விழா, இந்தப் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய இலக்கிய விழாவாக திகழ்ந்தது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, ஒளவையாரின் படைப்புகள் தொடா்பான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறாா். மக்கள் பிரதிநிதிகள்,அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

இரவு 8 மணிக்கு நாகை நாகராஜன் குழுவினா் பங்கேற்கும் ஒளவையின் அமுத மொழிகளை அதிகம் பகிா்ந்தவா்கள் வாழ்ந்தவா்களா ? வாழ்கின்றவா்களா? எனும் தலைப்பில் பாட்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை இரவு ஒளவைக்கு சிறப்பு அபிஷேகம், சிலம்பாட்டம், செளந்தா்யலட்சுமி குழுவினரின் தமிழிசை, ரஞ்சனி குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு முருகன் குழுவினரின் ஒளவையாரின் வரலாறு வில்லுப்பாட்டு, புதுச்சேரி கிராமிய கலைஞா்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

SCROLL FOR NEXT