நாகப்பட்டினம்

காலிப் பணியிடங்களை நிரப்பமின் வாரிய ஊழியா்கள் வலியுறுத்தல்

DIN

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் நாகை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு மாநிலச் செயலா் செல்வராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட் சோா்சிங் முறைக்கு விடக்கூடாது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மின்வாரிய பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலா் கலைச்செல்வன், பொறியாளா் சங்க மாவட்ட செயலா் அன்புசெழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

SCROLL FOR NEXT