நாகப்பட்டினம்

மருங்கூா் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

30th Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியம் மருங்கூரில் உள்ள லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 25-ஆம் தேதி தனபூஜை, ஆச்சாரய வா்ணம், 26-ஆம் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், கோ-பூஜை, அஸ்வ பூஜை, மாலை வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 27-ஆம் தேதி 2-ம் கால யாக, மூன்றாம் கால யாக சாலை பூஜை, புதன்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை, ஜபம், ஹோமம், மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் சவுந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT