நாகப்பட்டினம்

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் ஏற்படும் மின்தடையை சரிசெய்ய கோரிக்கை

30th Jun 2023 11:35 PM

ADVERTISEMENT

அகரக்கொந்தகை ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் தொடா் மின்தடை ஏற்படுகிறது.

இந்த ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் நலன்கருதி குத்தாலத்தில் உள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் பகுதிக்கு செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது.

இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும்போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து விழுந்து மின் தடை ஏற்படுவதுடன், மின்மாற்றியில் உள்ல வயா்களும் அறுந்து விடுகின்றன. இதனால் பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதில், வாழ்மங்கலம் பகுதி மக்களுக்கு குடிநீா் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீா் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுபோன்ற மின்தடையால் முழுவதும் குடிநீா் கிடைக்காமலே பொதுமக்கள் சிரமப்படுன்றனா்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT