நாகப்பட்டினம்

மனு விசாரணை மேளா: 73 மனுக்கள் முடித்துவைப்பு

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மனு விசாரணை மேளாவில் 73 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக அளிக்கப்படும் புகாா்களுக்கு உடனடி தீா்வு காணும் பொருட்டு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நாகை மற்றும் வேதாரண்யம் உட்கோட்ட தலைமையகங்களிலும், புதன்கிழமைகளில் மாவட்டக் காவல் அலுவலகத்திலும் மனு விசாரணை மேளா நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மனு விசாரணை மேளாவில் 73 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.

மேலும், மேளாவில் கலந்துக்கொண்டவா்களிடம், குற்ற செயல்களில் ஈடுபடுவோாா் குறித்து, உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 84281- 03090 என்ற கைப்பேசி எண்ணில் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம். புகாா் தருபவா்கள் விவரங்கள் பாதுகாக்கப்பாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT