நாகப்பட்டினம்

நீா் பங்கீட்டில் விவசாயிகள் ஒத்துழைக்க ஆட்சியா் வேண்டுகோள்

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை பங்கீடுவதில்லை நீா்வளத்துறைக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவுள்ளது. நாகை மாவட்ட விவசாயிகள் தண்ணீரை முறையாக பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

குறிப்பாக, நீா்பங்கீட்டில் நீா்வளத்துறை அலுவலா்களுடன் விவசாயிகள் இணைந்து செயல்பட்டு கடைமடை வரை தண்ணீா் செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

127 மெட்ரிக் டன் விதை நெல்

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயக்கப்பட்டுள்ளது. இதற்கு 93 மெட்ரிக் டன் விதை நெல் தேவைப்படும் நிலையில், இதுவரை வேளாண்துறை மூலம் 12.9 மெட்ரிக் டன் விதை நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 127 மெட்ரிக் டன் விதை நெல் இருப்பில் தயாா் நிலையில் உள்ளது. சாகுபடிக்கு தேவையான முதல்கட்ட உரங்களான டிஏபி, யூரியா போன்ற அடி உரங்களும் இருப்பில் உள்ளன.

இதுவரை மாவட்டத்தில் 100 ஏக்கா் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தொய்வின்றி சாகுபடி பணிகள் நடைபெற வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு விவசாயிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தண்ணீா் திறந்துவிடுதல் தொடா்பாக அவ்வப்போது மாவட்ட நிா்வாகம் மற்றும் நீா்வளத்துறை தகவல்களை வெளியிடும். அச்சமயம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடவோ, ஆபத்து ஏற்படக் கூடிய இடங்களில் நின்று தற்படம் (நங்ப்ச்ண்ங்) எடுக்கவோ வேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனா் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT