நாகப்பட்டினம்

மதுபானம் கடத்திய பெண் உள்பட இருவா் கைது

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை அருகே 200 மதுபான பாட்டில்களை கடத்திய பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் தனிப்படை போலீஸாா் பாப்பாக்கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், புதுவை மாநில மதுபான பாட்டில்கள் 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் வெளிப்பாளையத்தைச் சோ்ந்த அபிலாஷ் (42), பாப்பக்கோவில் மதகடி தெருவைச் சோ்ந்த விஜயா (47) என்பது தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT