நாகப்பட்டினம்

எடக்குடி ஊராட்சியில் மக்கள் குறைதீா் முகாம்

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், எடக்குடி ஊராட்சியில்  உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத்துறை மற்றும் தரங்கம்பாடி வட்ட வழங்கல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது 

முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலா் வெ. விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் விஜயா தங்கமணி முன்னிலை வகித்தாா். வட்ட வழங்கல் துறை தனி வருவாய் அலுவலா் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றாா். 

இதில் குடும்ப அட்டை பெயா் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்டவை தொடா்பான மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT