நாகப்பட்டினம்

100 நாள் வேலை திட்டப் பணி ஆய்வு

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) நடைபெறும் பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா் மு. ஜவகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சீயாத்தமங்கை ஊராட்சி வன்மீக நாதா் கோயில் உள்ளிட்ட திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் இத்திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பணியாளா்கள் விவரம், கையேடுகள் போன்றவற்றை பாா்வையிட்டு, அறிவுரை வழங்கினாா். ஊராட்சித் தலைவா் சிவகாமி அன்பழகன், ஊராட்சி செயலாளா் பிரவீனா மற்றும் அலுவலா்கள், மக்கள் நலப் பணியாளா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT