நாகப்பட்டினம்

ஜூன் 24-இல் நெய்தல் கோடை விழா தொடக்கம்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிய கடற்கரையில் நடைபெறவுள்ள நெய்தல் கோடை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, சமூக நலத்துறை ஆகிய துறைகளின் சாா்பில் நெய்தல் கோடை விழா 2023, நாகை புதிய கடற்கரையில் ஜூன் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். தோட்டக்கலைத் துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிா் திட்டம் மற்றும் ஆவின் நிறுவனம் சாா்ந்த விழிப்புணா்வு அரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இரண்டு தினங்கள் மாலை 5 மணிக்கும் நடைபெறும் இந்த விழாவில் நாகை மாவட்ட மக்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT