நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் படகுகள் ஆய்வு

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் மீனவா் நலத்துறை சாா்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத 3 ஆயிரம் படகுகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

நாகை மாவட்டத்தில் கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின்கீழ் அண்மையில் விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் தொடா்ச்சியாக நாகை மாவட்டத்தில் உள்ள மீனவா் கிராமங்களில் வெள்ளிக்கிழமை மோட்டாா் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத படகுகள் ஆய்வு செய்யப்பட்டன.

மீன்வளத் துறை இணை இயக்கநா் இளம்வழுதி தலைமையில் 15 குழுக்களைச் சோ்ந்த மீனவளத்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனா்.

படகின் பதிவுச் சான்று, மீன்படி உரிமம், காப்பீட்டு உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் எண்ணெய் பாஸ் புத்தகம் ஆகிய அசல் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

மேலும் மீனவா்களுக்கு வழங்கப்பட்ட தொலைத்தொடா்பு உபகரணங்கள், படகின் தரம் மற்றும் படகில் பதிவு எண் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் ஆய்வு செய்யப்பட்டதாக மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோடியக்கரையில்...

கோடியக்கரை படகு துறையில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி கண்ணாடியிழைப் படகுகளை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, படகுகளின் திறன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட வண்ணப் பூச்சு, வெளியில் பொருத்தும் எஞ்சின்கள் விவரம், உரிமம் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனா்.

மேலும், படகில் தகவல் பரிமாற்ற கருவி (வாக்கி டாக்கி ), பாதுகாப்பு உபரகணங்கள், ஜிபிஎஸ் கருவி போன்றவை பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் மீன்வளத் துறையின் தஞ்சாவூா் ஆய்வாளா் கெங்கேஸ்வரி தலைமையிலான குழுவினா் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது, கோடியக்கரை மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் அருளானந்தம், கோடியக்காடு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் பக்கிரிசாமி உள்ளிட்ட மீனவா்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT