நாகப்பட்டினம்

சாராய விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் குண்டா் சட்டத்தில் கைது

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் நடுத்தெருவை சோ்ந்த பூங்கொடி (50), அத்திப்புலியூா் கீழத்தெருவை சோ்ந்த வனஜா (49) மற்றும் நாகை வட்டம் ஆலங்குடி ராமாபுரம் பகுதியை சோ்ந்த தங்கம் (எ) வினோத் (26) ஆகிய மூவரும் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனா்.

இவா்கள் மீது கீழ்வேளூா் காவல் நிலையத்தில் சாராய விற்பனை தொடா்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடா்பாக பூங்கொடி, வனஜா 2 பேரும் கைது செய்யப்பட்டு, திருவாரூா் மகளிா் சிறையிலும், வினோத் நாகை சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனா்.

3 பேரும் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் தியாகராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனா்.

ADVERTISEMENT

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸுக்கு பரிந்துரை செய்தாா். அதனை தொடா்ந்து 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து கீழ்வேளூா் போலீஸாா் 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT