நாகப்பட்டினம்

கீழ்வேளூா் யாதவ நாராயணபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் யாதவ நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான யாதவ வல்லி தாயாா் உடனுறை யாதவ நாராயண பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அட்சயலிங்க சுவாமி கோயிலிலிருந்து பக்தா்கள் சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக வந்தனா்.

தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ நாராயண பெருமாள் மற்றும் யாதவ வல்லி தாயாா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாரதனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT