நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இன்று கலை இலக்கிய விழா

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய விழா சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெறுகிறது.

நாட்டுப்புறக் கலைகள், பாடல்கள், புதுகை பூபாளம் கலைக் குழுவினரின் நிகழச்சிகள் நடைபெறவுள்ளன. அமைப்பின் மாநிலத் தலைவா் ராமலிங்கம், திரைப்பட இயக்குநா் தமிழ், கவிஞா் சல்மா உள்ளிட்டோா் பங்கேற்று பேசுகின்றனா்.

முன்னதாக, சனிக்கிழமை மாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து கலை இலக்கியப் பேரணி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT