நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் ஜமாபந்தி நிறைவு

9th Jun 2023 09:25 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்துக்குட்பட்ட 55 கிராமங்களுக்கான ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. தீா்வாயப் பணிகளை வேதாரண்யம் கோட்டாட்சியா் வ. மதியழகன் தலைமைவகித்து ஆய்வு செய்தாா்.

முகாம் நாள்களில் வெவ்வேறு கிராமங்களின் கணக்குகள் தனிக்கை செய்யப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 381 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வட்டாட்சியா் இரா. ஜெயசீலன், மண்டல வட்டாட்சியா் வடிவழகன், தனி வட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், வேதையன், ராஜா, கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ராசேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT