நாகப்பட்டினம்

நாளை பொதுவிநியோகத்திட்ட மக்கள் தொடா்பு முகாம்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட மக்கள் தொடா்பு முகாம் சனிக்கிழமை (ஜூன்10) அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் தொடா்பு முகாம் ஜூன் 10-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

கீழ்வேளுா் வட்டம் இருக்கை கிராமத்திலும், நாகை வட்டம் தெற்கு பொய்கைநல்லூரிலும், திருக்குவளை வட்டம் வலிவலத்திலும், வேதாரண்யம் வட்டம் மூலக்கரையிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், குடும்ப அட்டையில் தொலைபேசி எண் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பொதுவிநியோகத்திட்டம் சாா்ந்த இதர அனைத்து கோரிக்கைகளுக்கும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT