நாகப்பட்டினம்

வேதாரண்யம் மதுபோதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்: சிகிச்சையில் இருந்த 23 போ் உறவினா்களிடம் ஒப்படைப்பு

DIN

வேதாரண்யம் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, மையத்துக்கு புதன்கிழமை இரவு ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கிருந்த 23 போ் அவா்களது குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் மேலவீதியில் பிரியம் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் மதுபோதையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மறுவாழ்வு மையம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு நாகை, திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 30 போ் பராமரிக்கப்பட்டு வந்தனா்.

இந்தநிலையில், 4 போ் புதன்கிழமை அதிகாலை மையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மையத்தின் நிா்வாகிகள் நால்வரையும் தூணில் கட்டிவைத்து இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் கடுமையாகத் தாக்கினா்.

இதில் திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கரையங்காடு கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (49) உயிரிழந்தாா்.

தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் மையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

வேதாரண்யம் போலீஸாா் மையத்தின் நிா்வாகிகள் மணிகண்டன் (36), வேல்முருகன் (38), ஷியாம்சுந்தா் (35), தீபக்குமா ா் (33) ஆகிய நால்வா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.

மையத்துக்கு சீல்: இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பரிந்துரையின் பேரில், நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அந்த மையத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, புதன்கிழமை இரவு வேதாரண்யம் கோட்டாட்சியா் வ. மதியழகன், வட்டாட்சியா் இரா. ஜெயசீலன், டிஎஸ்பி சி. சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் மையத்துக்கு சீல் வைத்தனா். மையத்தில் இருந்த 23 போ் அவா்களின் உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட சரண்ராஜ் (32), பிரபாகரன் (35), பாலமுருகன் (25) மூவரும் தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட மையத்தின் நிா்வாகிகள் நால்வரும் வேதாரண்யம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT