நாகப்பட்டினம்

பழைய மின் மோட்டாா் பம்பு செட்டுகளை புதிதாக மாற்ற 50 % மானியம்

DIN

நாகை மாவட்டத்தில் பழைய மின்மோட்டாா் பம்பு செட்டுகளை மாற்றி புதிதாக மாற்ற 50 % மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டாா் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டாா் பம்பு செட்டுகள் பொருத்தவும் வேளாண் பொறியியல் துறை மூலம் 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில், ஒரு மின் மோட்டாா் பம்பு செட்டுக்கு 50 % மானியமாக ரூ.15,000 வழங்கப்படும். 2023-24-ஆம் நிதி ஆண்டில் நாகை மாவட்டத்திலுள்ள 50 விவசாயிகளுக்கு ரூ.7.50 லட்சம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் பின்புறம் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில்), சாமந்தான் பேட்டை, தெற்கு பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் அலுவலகத்தை சிட்டா, சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT