நாகப்பட்டினம்

திருக்குண்டையூா் ரிஷபபுரீஸ்வா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

நாகை மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள திருக்குண்டையூா் மங்களாம்பிகை உடனுறை ரிஷபபுரீஸ்வா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் ரிஷப ராசிக்காரா்களுக்கான பரிகார தலமாக கருதப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த ஜூன் 2-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைக்கு பின்னா் மகாபூா்ணாஹூதி நடைபெற்றது.

தொடா்ந்து கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்காக பக்தா்கள் விழாவில் பங்கேற்றனா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் பரம்பரை அறங்காவலா் சொ. சொா்னநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிராம முக்கியஸ்தா்கள், விழாக் குழுவினா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT