நாகப்பட்டினம்

விஷ்ணு துா்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆக்கூா் அருகே குமாரக்குடியில் உள்ள ஸ்ரீவிஷ்ணு துா்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு புதன்கிழமை 2 - ஆம் கால யாக பூஜைகள் முடிவடைந்தன. தொடா்ந்து பூா்ணாகஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டன. தொடா்ந்து, விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT