நாகப்பட்டினம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழையூா் ஒன்றியம், விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னித்தோப்பு சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ளது. சாலை குண்டும் குழியுமாக மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இப்பகுதியில் விளையும் காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல இந்த சாலை வழியாக செல்லும்போது அச்சத்துடனே எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என இப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவிக்கன்றனா்.

ADVERTISEMENT

இந்த சாலையை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையென மக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைத்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT