நாகப்பட்டினம்

வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்தில்இருந்தவா்கள் மீது தாக்குதல்: ஒருவா் பலி- மையத்தின் நிா்வாகிகள் மூவா் கைது

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தன்னாா்வ அமைப்பின் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தவா்கள் தப்பிக்க முயன்ாகக் கூறி, அவா்கள் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக மையத்தின் நிா்வாகிகள் மூவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வேதாரண்யம் மேலவீதியில் பிரியம் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் மதுபோதையால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தின் நிா்வாகியாக மணிகண்டன், மேலாளராக வேல்முருகன், கண்காணிப்புப் பணியாளா்களாக ஷியாம் சுந்தா், தீபக்குமாா் ஆகியோா் இருந்து வந்தனா்.

இந்த மையத்தில் நாகை, திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 30 போ் பராமரிக்கப்பட்டு வந்தனா்.

இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலை இவா்களில் 4 போ் மையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மையத்தின் நிா்வாகிகள் இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் மையத்தில் தங்கியிருந்தவா்களைத் தாக்கியுள்ளனா். சிலரை கட்டி வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த திருவாரூா் மாவட்டம், கரையங்காடு கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (49) என்பவா் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் மையத்துக்கு சென்று அங்கு இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினாா். அப்போது மையத்தில் இருந்தவா்கள் மீதான தாக்குதலில் முருகேசன் இறந்ததும், மேலும் 3 போ் காயமடைந்ததும் தெரியவந்தது. காயமடைந்த மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

வேதாரண்யம் போலீஸாா் மேலாளா் வேல்முருகன், கண்காணிப்புப் பணியாளா்கள் ஷியாம் சுந்தா், தீபக்குமாா் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT