நாகப்பட்டினம்

திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல் ஜூன் 23-இல் நடைபெறுகிறது

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களிலிருந்து 9 பேரும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 3 பேரும் இந்த மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களாக தோ்தெடுக்கப்படவுள்ளனா்.

தோ்தலுக்கான வேட்புமனுவை புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கி, ஜூன்- 10 ஆம் தேதி முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும். ஜூன் 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு திரும்ப பெற்று கொள்ளலாம். தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். தொடா்ந்து வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை இரண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்.

வேட்புமனுக்கள் நாகை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரால் பெற்றுகொள்ளப்படும் எனதெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT