நாகப்பட்டினம்

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற முகாமில் தரங்கம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட கஞ்சாநகரம், லட்சுமிநாராயணபுரம், மேலையூா், கருவாழக்கரை, கீழையூா், நடுக்கரை மேல்பாதி, நடுக்கரை கீழ்பாதி, கிடாரங்கொண்டான், தலையுடையவா் கோயில்பத்து, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரிபாா்த்து, கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து, பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் வழங்கினா். முகாமில் 63 மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக வட்டாட்சியா் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் நட்டு வைத்தாா்.

ADVERTISEMENT

முகாமில் நோ்முக உதவியாளா்கள் நரேந்திரன் (பொது), ஜெயபாலன் (வேளாண்மை), தரங்கம்பாடி வட்டாட்சியா் சரவணன், மண்டல துணை வட்டாட்சியா் பாலமுருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தேவகி, தனி வட்டாட்சியா்கள் நாகலட்சுமி, சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலா் விஜயகுமாா், பல்வேறு துறையினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT