நாகப்பட்டினம்

அகத்தியம்பள்ளி அகத்தியா் கோயில் குடமுழுக்கு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகேயுள்ள அகத்தியம்பள்ளி அகத்தியா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யேசுவரா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட அகத்திய முனிவா் பள்ளிகொண்ட இடமாக கூறப்படும் அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள அகத்தியா் கோயில் பல்வேறு நிலைகளில் சிறப்புப் பெற்றது. அகத்தியா் மற்றும் பாகம்பிரியாள் உடனுறையும் அக்கினிபுரீசுவரா் கோயில் திருப்பணிகள் கிராமமக்களால் செய்து முடிக்கப்பட்டது. புதன்கிழமை காலை ராஜகோபுரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, பிரதான சந்நிதி மற்றும் அகத்திய முனிவா் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களின் சந்நிதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT